1. Home
  2. தமிழ்நாடு

இன்று டெல்லி செல்லும் பாஜக தலைவர்கள்..! காலை 11 மணிக்கு எல்.முருகன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு..!

1

சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

தமிழ்நாட்டில் இதுபோன்று ஒரு அரசியல் தலைவர் படு கொலை நடக்கவில்லை. முதல் முறையாக அரசியல் தலைவர், தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் முன்பே கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. ஜேபி நட்டா முதல் தேசிய தலைவர்கள் வரை செல்போனில் இந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.

நாளை அதாவது இன்று பாஜக மூத்த தலைவர்கள் 5 பேர் டெல்லி செல்ல உள்ளனர். டெல்லியில் காலை 11 மணிக்கு எல் முருகன் தலைமையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என கோருவோம். பட்டியல் இன சகோதர, சகோதரிகளுக்காக இருக்கின்ற ஆணையத்தில், கடந்த 3 ஆண்டுகளில் பட்டியல் இன சகோதரர்களுக்கு நடந்துள்ள குற்றங்கள், வேங்கை வயலில் ஆரம்பித்து ஆம்ஸ்ட்ராங் வரை 17 சம்பவங்கள் பற்றி முறையிட போகிறோம்.

சென்னையில் ஒரு மாநில கட்சியின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் யார் இருக்காங்க.. அரசியல் காரணம் இருக்கிறதா? பொருள் உதவி செய்தது யார்? என்ன காரணம் என்பதை எல்லாம் ஆராய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை வந்து கூலிப்படையின் தலைநகராக இருக்கிறது.

ஆமை வேகத்தில் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடந்து கொண்டிருருக்கிறது. எனவே இனிமேலாவது, கூலிப்படைகளுக்கு இடமில்லை என்று சொல்ல வேண்டும். இந்த நிலையை கொண்டு வரனும். செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

Trending News

Latest News

You May Like