ஸ்டாலினுக்கு சவால் விடும் பாஜக தலைவர்!

தமிழகத்தின் எந்த தொகுதியிலும் தேர்தலில் நின்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது வரலாற்று உண்மை. ஒரே தொகுதியைப் பிடித்துக் கொண்டு அவர்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஆனால் திமுக தலைவர்கள் இதுவரையில் எந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் நின்று வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் இருக்கும் ஏதாவதொரு தொகுதியில் ஸ்டாலினால் போட்டியிட முடியுமா? என்று பாஜக வின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் சவால் விடுத்திருக்கிறார்.
பிரதமர் மோடி அரசை மக்கள் ஆதரிக்கின்றனர். ஆனால், மோடியை எதிர்த்து அரசியல் அறிக்கைகள் வெளியிடுவதை மட்டுமே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார் என்றார்.