1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவையில் வேட்புமனு தாக்கல்..!

1

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுக்களை தக்கல் செய்தனர். கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயிலில் பாஜக வேட்பாளர் அண்ணமலை சாமி தரிசனம் செய்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அவருடன் வந்தனர்.

கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அண்ணாமலை சென்றார்.

தமிழகம் முழுவதும் நேற்று வரை சுமார் 700 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனுவை கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமாரிடம் அண்ணாமலை வழங்கினார்.

Trending News

Latest News

You May Like