1. Home
  2. தமிழ்நாடு

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கும் இடங்களில் கூட பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்கவில்லை :அண்ணாமலை..!

1

நவம்பர் 1 முதல்,பாஜக தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தினமும் 100 கொடி கம்பங்கள் நிறுவப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக கொடி கம்பம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அண்ணாமலை அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதியான இன்று, சென்னை, கோவை உட்பட பல இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பம் அமைக்க முயன்றுள்ளனர். பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் நடப்படுகிறது என்றால் முறையாக நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் இருந்து அனுமதி பெற்று அக்கடிதத்தை போலீசாரிடம் அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட பிறகு, அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் நடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மாநகராட்சியின் அனுமதி கடிதம் இணைக்கப்படவில்லை என காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கொடிக் கம்பம் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் வைத்தால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் அருகே திரண்ட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக மாநிலத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கனவே உள்ளது. இங்கு இன்று பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கூடிய பாஜகவினர், கொடியேற்றுவதாக கூறி புதிய கொடிக்கம்பத்தை நட முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி புதிய கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பாஜகவினருக்கும்,போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் கூடியதாக கூறி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, உட்பட பாஜகவினர் சுமார் 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழக பாஜக  பின்வாங்கப் போவதில்லை. 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும். 


 

Trending News

Latest News

You May Like