1. Home
  2. தமிழ்நாடு

பாஜக அரசு அதிரடி..! பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுக்க கூடாது..!

1

பொது இடத்தில் மாடுகள் மற்றும் ஒட்டகங்களை பலி கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இது சட்டப்படி குற்றமாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பலி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த இடங்களை தவிர இதர இடங்களில் பலி கொடுப்பது சட்டவிரோதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சட்டவிரோதமான பலி கொடுப்பதை எதிர்த்து உடனடி நடவடிக்கை எடுக்க போலீசருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

அதுமட்டுமின்றி, மாடுகள், ஒட்டகங்களை பலி கொடுப்பதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், அதுவும் குற்றமாக கருதப்படும் என்று டெல்லி மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like