தூக்கில் தொங்கிய பாஜக நிர்வாகி.. காங்கிரஸார் மீது சந்தேகம்!!

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் கணேஷ் ராய். அவர் பாஜகவில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தமது சொந்தகிராமமான கானாட்டி ரயில்வே நிலையம் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கணேஷ் ராயின் மரணத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக கணேஷ் ராயை கொலை செய்து மரத்தில் தூக்கிட்டு மாட்டி விட்டுருக்கிறது என மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். பாஜகவின் வளர்ச்சியை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் அச்சமடைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் முன்விரோதம் காரணமாகவே கணேஷ் ராய் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.