1. Home
  2. தமிழ்நாடு

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. பாஜக நிர்வாகி அதிரடி கைது !

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. பாஜக நிர்வாகி அதிரடி கைது !


விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு சார்பில் கிசான் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் தமிழகத்தில் பெரியளவு மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

கடலூர், திருவாரூர், தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போலி பயனார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. பாஜக நிர்வாகி அதிரடி கைது !

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா மோசடியில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வஜ்ஜிரவேலு வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார். வேளாண் அதிகாரிகள், கணினி மைய உரிமையாளர் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு.. பாஜக நிர்வாகி அதிரடி கைது !

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக ஒன்றிய நிர்வாகி கண்மணி, கணினி மைய உரிமையாளர் ஜெகநாதன் ஆகியோரிடம் இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி உள்பட இருவரையும் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,687 பேர்முறைகேடாக இணைக்கப்பட்டு ரூ.80.60 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like