1. Home
  2. தமிழ்நாடு

பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் அதிரடி நீக்கம்.. 7.5% உள்ஒதுக்கீடு கூடாது என கூறியதால் சர்ச்சை !

பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் அதிரடி நீக்கம்.. 7.5% உள்ஒதுக்கீடு கூடாது என கூறியதால் சர்ச்சை !

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்ககோரி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் ஆளுநர் அதன்மீது முடிவெடுக்காதல் காலம் தாழ்த்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனை கண்டித்தும், 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கக்கோரியும் திமுக சார்பில் பெரும்திரளாக போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கூடாது என ஆளுநருக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்

பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் அதிரடி நீக்கம்.. 7.5% உள்ஒதுக்கீடு கூடாது என கூறியதால் சர்ச்சை !

மேலும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் நீதிமன்றத்துக்குப் போய் தடையாணை பெறுவோம் என்றும் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதம் எழுதியுள்ள நந்தகுமார், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

இதனால் பாஜகவில் புகைச்சல் ஏற்பட்டது. ஏனெனில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறது. எல்.முருகன் இதே கோரிக்கையை தமிழகத்தில் வலியுறுத்தினார்.

பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர் அதிரடி நீக்கம்.. 7.5% உள்ஒதுக்கீடு கூடாது என கூறியதால் சர்ச்சை !

இதனையடுத்து நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநில தலைவர் எல்.முருகன் பிறப்பித்துள்ளார். 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தரக் கூடாது என ஆளுநருக்கு கடிதம் எழுதிய பாஜக நிர்வாகி நீக்கப்பட்டதால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like