இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை..!
பாஜக மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இடைத்தேர்தல் தொடர்பாகக் கூட்டணி கட்சிகளுடன் பேச்சவார்த்தை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லையெனத் தேசிய தலைமையிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியைக் கூட்டணி கட்சிக்குக் கொடுக்கலாமெனப் பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லையெனத் தகவல் வெளியாகியுள்ளது.