பா.ஜ.க வரலாற்று சாதனை - 18 நாளில் 4 கோடி..!
எந்தக் கட்சியும் செய்யாத சாதனையாக, 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களைப் பா.ஜ., சேர்த்து மற்ற கட்சிகளை மிரள வைத்துள்ளது. இந்தத் தகவலைப் பா.ஜ., தேசிய தலைமை தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; 18 நாட்களில் 4 கோடி உறுப்பினர்களைக் கடந்துவிட்டோம். இன்னமும் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு வருகின்றனர். மற்றுமொரு சாதனையைப் பா.ஜ., படைத்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகுறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே கூறி உள்ளதாவது; உறுப்பினர் சேர்க்கையில் புதுவேகம் உள்ளதுபோல், புதிய அடையாளங்களை உருவாக்குவது என்பதை பற்றி மக்கள் சிந்தித்து வருகின்றனர் என்று கூறி உள்ளார்.