3 நாட்கள் விரதம் இருக்க போகிறேன் : பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா அறிவிப்பு..!

பூரி பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா,நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "மோடி பூரி ஜென்நாதரின் பக்தர்" என்று கூறுவதற்கு பதிலாக "பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்" என்று கூறினார்.இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "மகாபிரபு ஸ்ரீ ஜெகன்நாதர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள். அவரை ஒரு மனிதரின் பக்தர் என்று கூறுவது மிகப்பெரிய அவதூறாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த கருத்து உலகம் முழுவதும் உள்ள ஜெகன்நாதரின் பக்தர்களுடைய மனதை புண்படுத்தியுள்ளது. பூரி ஜெகன்நாதர் ஒடிசாவின் பெருமைக்குரிய அடையாளம் ஆவார். அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம் என பா.ஜனதாவிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டார்.
அதே போல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் சம்பித் பத்ராவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த நிலையில் சம்பித் பத்ரா தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் தவறுதலாக கூறிய கருத்துக்கு பூரி ஜென்நாதரின் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தவறுக்காக அடுத்த 3 நாட்கள் நான் விரதம் இருக்கப் போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
आज महाप्रभु श्री जगन्नाथ जी को लेकर मुझसे जो भूल हुई है, उस विषय को लेकर मेरा अंतर्मन अत्यंत पीड़ित है।
— Sambit Patra (Modi Ka Parivar) (@sambitswaraj) May 20, 2024
मैं महाप्रभु श्री जगन्नाथ जी के चरणों में शीश झुकाकर क्षमा याचना करता हूँ। अपने इस भूल सुधार और पश्चाताप के लिए अगले 3 दिन मैं उपवास पर रहूँगा।
जय जगन्नाथ। 🙏
ଆଜି ଶ୍ରୀ… pic.twitter.com/rKavOxMjIq