1. Home
  2. தமிழ்நாடு

"ஜோசப் விஜய்" என வம்பிழுத்த பாஜக தற்போது விநாயகர் சதுர்த்தி வைத்து பஞ்சாயத்து..!

1

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவானது உலகெங்கும் வசிக்கும் இந்து மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

வீடுகளிலும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. கால் அடி முதல் 70 அடி வரை பல்வேறு உயரங்களில் இந்தியா முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என ட்வீட் செய்துள்ளார் பாஜக பிரமுகரான வினோஜ் பி செல்வம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இந்த ட்வீட்டை போடுவதற்காக இரவு ஏழு மணி வரை காத்திருந்தேன்.. புதிய கட்சி தொடங்கி இருக்கும் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் சொல்லவில்லை.. சிறுபான்மையினர் மக்களை குஷிப்படுத்தும் அதே பழைய தந்திரத்தை விஜய் கடை பிடித்து இருக்கிறார். திமுகவை காப்பியடிக்கும் அளவுக்கு விஜய் தரம் தாழ்ந்து போயிருக்கிறார்.. மக்கள் சிந்திக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அதாவது பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் தற்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது.

விஜய்-ஐ ஏற்கனவே "ஜோசப் விஜய்" என வம்பிழுத்த பாஜக தற்போது மீண்டும் மத அரசியலை வைத்து விமர்சிக்க ஆரம்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like