பா.ஜ., மாநில தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..!

பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. மாநில தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக தற்போதைய மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (11.04.2025) முதல் தொடங்குகிறது; நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானகரம் மண்டபத்தில் 12-ம் தேதி பா.ஜ., மாநில தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.