பாஜக அண்ணாமலை வாட்ஸ்அப் எண் வெளியீடு.. கேள்வி கேளுங்க பதிலளிப்பார்.. புது வியூகம் !
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என முட்டிமோதி வருகிறது பாஜக. அதுவும் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே இதனை சாதித்தால் தான் முடியும் என்றும் அவர்கள் கட்டம்கட்டி வருகின்றனர். இதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக போராடி வருகிறார்.
தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். எந்த விவகாரம் என்றாலும் தானாகசென்று கருத்துகூறி வருகிறார். அது சர்ச்சையாக இருந்தாலும் அதனையும் அரசியலாக பயன்படுத்தி வருகிறார். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் இப்போதே கூறி வருகிறார். அந்த வகையில் பல முயற்சிகளை எடுத்துவருகிறார்.

அந்த வகையில் புதிய திட்டத்தை தமிழக பாஜக அறிவித்துள்ளது. அதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை அண்ணாமலையின் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அதற்கான வாட்ஸ்அப் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்: 8056137459, 8148165174, மின்னஞ்சல்: in.oreynaadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் கேள்விகளை நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கு உங்கள் அண்ணா பதிலளிக்கிறார். ஜூன் 4, 2022 முதல் என தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 17, 2022
தங்களுடைய கேள்விகளை எங்களுடைய வாட்சப் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
வாட்சப் : 8056137459 | 8148165174
மின்னஞ்சல் : in.oreynaadu@gmail.com#AnnamalaiAnswers #KAnnamalai pic.twitter.com/IR7NJB3rqL
newstm.in