1. Home
  2. தமிழ்நாடு

2024ம் ஆண்டிற்கான சிறந்த பறவைக்கான விருது பெற்ற பறவை..!

1

சிறந்த பறவைக்கான விருதை நியூசிலாந்து நாட்டின் மஞ்சள் கண் பென்குயின் தட்டிச்சென்றது.

மஞ்சள் கண் பென்குயின், அல்லது ஹைஹோ எனச் சொல்லப்படும், இந்தப் பென்குயின் 6,328 ஓட்டுக்கள் பெற்று இரண்டாவது முறை வெற்றிபெற்றுள்ளது. ஆண்டுதோறும், நடைபெறும் போட்டியில் இம்முறை பெற்ற வெற்றியோடு வெற்றிக்கணக்கை இரண்டாக உயர்த்தியது.

வனத்துறை, பறவை பாதுகாப்பு சங்க அமைப்பாளர்களால் உலகின் அரிதான பென்குயின் இனமாகக் கருதப்படும் ஹைஹோ, கூச்ச சுபாவம் கொண்டதாக அறியப்படுகிறது.

இரண்டாம் இடத்தைப்பிடித்த சாதம்தீவு பிளாக் ராபின் மற்றும் ககாபோவை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. ஆன்லைன் போட்டியின் இறுதி வாரத்தில் குறிப்பிடத் தக்க மக்கள் ஆதரவை இந்தப் பறவை பெற்றது.

195 நாடுகளிலிருந்து அதிகம்பேர் ஓட்டுப்போட்டு ஹைஹோவை சிறந்த பறவையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.இந்தப் போட்டியில் 52,500 வாக்குகள் பதிவாகின. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, போட்டி மிகவும் குறைவாக இருந்தது.

நியூசிலாந்தை சேர்ந்த ஹைஹோ இனம் 4,000 முதல் 5,000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது.

இதற்கு முன், 2019ல் சத்தமாகக் கத்துவது என அறியப்பட்ட பென்குயினான மவோரி, வெற்றி பெற்றிருந்தது.

வன மற்றும் பறவையின் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கோலா டோக்கி கூறுகையில், ஹைஹோ பென்குயின் ஆபத்தான நிலையில் உள்ளது.

‘வேட்டையாடுபவர்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வெறும் 15 ஆண்டுகளில் 78 சதவீதத்தை இழந்துவிட்டோம்,’ என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like