1. Home
  2. தமிழ்நாடு

பில்லியனிரின் உடல் பாகங்கள் சூட்கேஸில் கண்டெடுப்பு..! பகீர் பின்னணி

1

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு நீரோடையின் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அவர்கள் அங்கு சிவப்பு நிற சூட்கேஸ் கிடப்பதாக பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர்.

அப்போது, கடந்த ஜூலை 19-ம் தேதி காணாமல் போன தொழிலதிபர் பெர்னாண்டோ பெரெஸ் அல்காபாவின் கால்கள் மற்றும் முன்கைகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மற்றொரு கை ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன தலை மற்றும் உடற்பகுதியை புதன் கிழமை போலீசார் கண்டுபிடித்தனர். உடல் உறுப்புகள் சுத்தமாக துண்டிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

fernando-perez-algaba

பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் அல்கபாவின் உடல் வெட்டப்படுவதற்கு முன்பு அவர் மூன்று முறை சுடப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியது. அவர்களால் அல்காபாவை அவரது கைரேகைகள் மற்றும் உடல் பாகங்களில் உள்ள தனித்துவமான பச்சை குத்தல்கள் மூலம் அடையாளம் காண முடிந்தது.

மார்கா அறிக்கையின்படி, அல்காபா மியாமியில் இருந்து மாறி பார்சிலோனாவில் இருந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அர்ஜென்டினாவில் தங்கியிருந்தார். அல்காபா சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து கிரிப்டோகரன்சி மூலம் தனது செல்வத்தை குவித்தார். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ள அவர், தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

fernando-perez-algaba

இவர் வாடகைக்கு எடுத்திருந்த அடுக்குமாடி குடியிருப்பை, ஜூலை 19 அன்று காலி செய்வதாக இருந்தது, ஆனால் அதை செய்ய தவறிவிட்டார். தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை, அதன் பிறகு வீட்டு உரிமையாளர் காணாமல் போன புகாரைப் பதிவு செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்காபாவின் மரணம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், பல கடன்கள் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like