1. Home
  2. தமிழ்நாடு

மனைவியின் பாதுகாப்புக்காக 400 கோடி ரூபாயில் மனைவிக்காக தனித்தீவு வாங்கிய கோடீஸ்வரர்..!

1

துபாய்யைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனக்காக தனது கோடீஸ்வரக் கணவர் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில், “நீங்கள் நீச்சல் உடை அணிய விரும்பினால், உங்கள் கோடீஸ்வர கணவர் உங்களுக்கு ஒரு தீவை வாங்கித் தருவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

யார் அவர் தெரியுமா.? துபாய்யைச் சேர்ந்த 26 வயதான சௌடி அல் நாடக் என்ற பெண் இங்கிலாந்தில் பிறந்தவர். துபாயில் உள்ள கோடீஸ்வரரான ஜமால் அல் நாடக் திருமணம் செய்துள்ளார். இருவரும் துபாயில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். சௌடி தற்போது முழுநேர இல்லத்தரசியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தபோதிலும்கூட சௌடி அல் நடாக் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் விடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது அவரது கணவர் தனித் தீவு வாங்கித் தந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே, அந்த விடியோ 24 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதுபற்றி சௌடி கூறுகையில், ஒரு முதலீடுக்காகவே தனது கணவர் தீவை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்கள் மற்றும் பாதுகாப்புக்காக தீவின் அமைவிடத்தை செல்ல மறுத்துவிட்டார் சௌடி. சுமார் 5 கோடி டாலர்களில் வாங்கப்பட்ட அந்தத் தீவு ஆசியாவில் அமைந்துள்ளது என்றும் மட்டும் கூறினார். 

Trending News

Latest News

You May Like