எச்சரிக்கும் பில் கேட்ஸ்... போரை மட்டும் தவிர்த்தால்..

கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்போது உலகம் முழுக்க மக்களிடையே அழுத்தம் நிலவி வருகிறது. தற்போது உலகில் மக்கள் நல்ல மனநிலையில் இல்லை. தலைவர்களிடையே கடுமையான அழுத்தம் உள்ளது. இதெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய போரை உருவாகும். பெரிய போர் கண்டிப்பாக உருவாகும். நாம் ஒருவேளை போர் வருவதை தடுத்தால் கண்டிப்பாக ஒரு பெருந்தொற்று வரும். அடுத்த 25 வருடங்களுக்குள் ஒன்று போர் வரும். அல்லது பெரிய பெருந்தொற்று வரும்.
அடுத்த 25 வருடங்களுக்குள் இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இதைத் தடுக்க முடியாது. தொற்றுநோய்கள் காலப்போக்கில் ஏற்படக்கூடியவை. தவிர்க்க முடியாதவை. காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி போன்ற காரணிகளால் அவை மிகவும் பொதுவானதாகி வருகின்றன. இதனால் நாம் இரண்டில் ஒன்றை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
தற்போது உலகில் மக்கள் நல்ல மனநிலையில் இல்லை. தலைவர்களிடையே கடுமையான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் கண்டிப்பாகப் போருக்கு வித்திடும். அப்படி போர் நடக்கவில்லை என்றால் நமக்கு இடையே பெருந்தொற்று ஏற்படும், என்று கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.