1. Home
  2. தமிழ்நாடு

பிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் திருமணம்! எத்தனாவது திருமணம் தெரியுமா?

பிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் திருமணம்! எத்தனாவது திருமணம் தெரியுமா?


பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்தார். சந்திரலேகா படத்திற்கு பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை. 

ஹீரோயினாக அறிமுகமான அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் அறிந்து கொண்டனர். வனிதா கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் பிறந்தார். மூன்று வருடம் மட்டுமே நீடித்த அந்த வாழ்க்கை 2010 ஆம் ஆண்டு விவாகரத்துடன் முடிவடைந்தது.

பிக்பாஸ் வனிதாவுக்கு மீண்டும் திருமணம்! எத்தனாவது திருமணம் தெரியுமா?
பின்னர் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் செய்திகள் உள்ளது. இந்நிலையில் வனிதா இந்த மாத இறுதியில் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வனிதாவுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த கல்யாணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like