தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய மோசடி!

தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதில், 22,500 பேர் போலி ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வரி ஏய்ப்பு, வரி திரும்ப பெறும் மோசடி நடந்துள்ளது.
இதனையடுத்து, பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.