பிக்பாஸ் தமிழ் பெயரில் மோசடி..! பெண்களே உஷாரா இருங்க..!

பிக் பாஸ் ஆடிஷன் ஆரம்பமாகிவிட்டது. ஆன்லைனில் ஆடிஷன் நடக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் என்னை தொடர்பு கொள்ளவும் என விளம்பரம் வந்திருக்கிறது. அதை பார்த்த சிலர் பிக் பாஸ் 9 வாய்ப்பு தருகிறோம் என மெசேஜ் வருகிறதே, நிஜமாகவே ஆடிஷன் துவங்கிவிட்டதா என கேட்டிருக்கிறார்கள்.
அதை பார்த்த விஜய் டிவியின் பிரதீப் மில்ராயோ பிக் பாஸ் ஆடிஷன் துவங்கவில்லை. போலி ஆசாமிகள், காஸ்டிங் ஏஜென்சிகளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் போட்டியாளர்களை எந்த ஏஜென்சி மூலமாகவும் தேர்வு செய்ய மாட்டார்கள். அவர்களே நேரடியாக தேர்வு செய்வார்கள். அதனால் பிக் பாஸ் வாய்ப்பு வேண்டுமானால் வாங்க என யாராவது அழைத்தால் நம்பி போய்விட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 19வது சீசன் குறித்த பேச்சு கிளம்பியதும் தமிழ் பிக் பாஸ் 9வது சீசனை விரைவில் துவங்குவார்களா என ஆளாளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் போட்டியாளர்கள் தேர்வு துவங்கிவிட்டதாக இப்படி போலியாக அறிவிப்பு வெளியிட்டு ஏமாற்ற முயற்சி நடந்திருக்கிறது.
பிரதீப் மில்ராயின் எச்சரிக்கையை பார்த்தவர்களோ, பிக் பாஸ் 9 நிகழ்ச்சி எந்த சேனலில் ஒளிபரப்பாகும் என்பதை சொல்லிவிடுங்கள் என கேட்டிருக்கிறார்கள். விஜய் டிவி இனி விஜய் டிவியாக இருக்காது. அதை கலர்ஸ் தமிழ் சேனல் வாங்குகிறது.
எனவே, பிக் பாஸ் 9 நிகழ்ச்சி கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்தே பிக் பாஸ் உங்களிடம் இருக்கிறாரா இல்லை கலர்ஸ் சேனலிடம் சென்றுவிட்டாரானு சொல்லுங்க பிரதீப் சொல்லுங்க என கேட்கிறார்கள் பார்வையாளர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை விண்வெளி நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த சீசனின்போது கமல் ஹாசனின் டேட்ஸ் கிடைக்கவில்லை. பட வேலையில் இருந்ததால் பிக் பாஸ் ஷூட்டுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாமல் போனது. இதையடுத்தே விஜய் சேதுபதி வசம் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றது.இந்நிலையில் 9வது சீசனில் கமல் ஹாசனை பார்க்க முடியுமா இல்லை விஜய் சேதுபதியை வைத்து தான் இனி வரும் சீசன்கள் நடக்குமா என பிக் பாஸ் பார்வையாளர்கள் கேட்கிறார்கள்.
இதற்கிடையே 9வது சீசனுக்கு சிம்புவை அழைத்து வாங்க பிக் பாஸ், நடிப்பின் நயாகன் சூர்யாவை அழைத்து வாங்க என கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சிம்புவும் சரி, சூர்யாவும் சரி கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார்கள். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர்கள் இரண்டு பேருக்குமே நேரம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
🚨Same as every year advice….
— Imadh (@MSimath) May 29, 2025
Don’t fall for any casting agencies.
The BB team always hire the contestants themselves and with no third party involved.
So be alert…. Especially FEMALES #biggbosstamil #biggbosstamil9 @pradeepmilroy pic.twitter.com/XiojXYbcNa