1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ஒரு டீப் ஃபேக் வீடியோ : நிர்வாண வீடியோவில் பிக்பாஸ் பிரபலம்..!

1

பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம் ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் வலை தொடர்களில் நடித்து அசத்தி வருகிறார். இவர் பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.

தனது ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ்க்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தல அஜித் நடிப்பில் வெளி வந்த நேர் கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரை செய்து அசத்தினார்.

மேலும் இவர் ஓடிடி தளத்தில் ஆரம்பித்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஐந்தாவது ரன்னர் இடத்தை பிடித்திருக்கிறார். இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவார்.

இந்நிலையில் நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் நிர்வாண வீடியோ எனக்கூறி டீப் ஃபேக் வீடியோ ஒன்றை இணையத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த விவகாரம் அபிராமியின் கவனத்துக்கு சென்றதை அடுத்து அவர் இதுகுறித்து பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி, ஆனால் அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி. கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் தக்க பாடத்தை கற்றுக்கொடுக்கும். நான் தைரியமான பெண், எனது வலிமையை யாராலும் தகர்க்க முடியாது. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை தவிர மற்ற எல்லாவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது. பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என தெரியவில்லை. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவும் முடிவெடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

1

Trending News

Latest News

You May Like