1. Home
  2. தமிழ்நாடு

பிக் பாஸ் பிரபலம் அறிவித்த குட் நியூஸ்..!!

1

சென்னையை சேர்ந்த பிரதீப் ஆண்டனி அருவி, டாடா, வாழ் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிரதீப்பிற்கு பிக் பாஸ் புதிது அல்ல. சீசன் 3-ல் கவினின் விருந்தினராக வீட்டுக்குள் வந்த பொழுது கவின் கன்னத்தில் அறைந்து ’நீ விளையாடுவது வெளியில் உள்ளவர்களை ஏமாற்றுகிறது’ என தெரிவித்து சர்ச்சைக்கு உள்ளானார். அத்துடன் பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் சில சர்ச்சைகளில் சிக்கி பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் பிரதீப் ஆண்டனிக்கு தனது தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



 

Trending News

Latest News

You May Like