1. Home
  2. தமிழ்நாடு

பிக்பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் 8 போட்டியாளர்..!!

1

பிக் பாஸ்-8 நிகழ்ச்சியில் இன்று  வழங்கப்பட்ட டாஸ்க்கினால் ராணவிற்கு கை அடிபட்டு விடுகிறது. அதனால் அவர் மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வார ஏதாவது ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள கற்களை ஒருவர் உதவியுடன் காப்பாற்ற வேண்டும். அப்படி பவித்ராவும் ஜெஃப்ரியும் ஒரு அணியாக இணைந்து கற்களை காப்பாற்ற அவர்களிடம் இருக்கும் கல்லை ராணவ் எடுக்க முயலும் போது ஜெஃப்ரி ராணவ்வை தள்ளிவிட்டதில் ராணவ்வுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

 

ராணவ் கையை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தபோது சுத்தி இருந்த போட்டியாளர்கள் அனைவரும் அவன் வலியால் துடிப்பது போல் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்க, அப்போது அவர் தனக்கு வலிக்கிறது என கத்துகிறார். உடனடியாக ராணவ்வை அருண் மற்றும் விஷால் இருவரும் தூக்கிக்கொண்டு, கன்பக்ஷன் ரூமுக்கு செல்கிறார்கள். அப்போது கூட, வெளியே இருக்கும் சிலர், ராணவ் நடிக்கிறான் என கூறுகின்றனர்.

 

இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் கேப்டன் விஷால்" ராணாவுக்கு கையில் அடிபட்டு இருக்கு அடுத்த 3 வாரங்களுக்கு அவர் ரெஸ்ட்ல இருக்கனும்" என்று சொல்கிறார். 


 


 

Trending News

Latest News

You May Like