நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி.. தங்கம் வரலாறு காணாத உயர்வு... வெள்ளி விலை ஒரே வாரத்தில் கிலோவிற்கு 6400 உயர்வு..!
பணவீக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்பது பொதுவாக பொருளாதார நடைமுறையாகும்.இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தகம் எதுவும் நடப்பதில்லை என்பதால், அன்றைக்கு மட்டும் தங்கத்தின் விலை மாறாது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும் , சவரன் ரூ.52,920க்கும் விற்பனையானது விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 360 ரூபாய் உயர்ந்து, ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ரூ.53,280-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,085-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் உயர்ந்து, ரூ.7,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 87,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்து, ரூ.88,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.88.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் இதே நாளில் (திங்கள்கிழமை) ஒரு கிலோ வெள்ளியின் விலை 81600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.