#BIG NEWS : தமிழகத்தில் கொரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சேத்துக்குழி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் ஜேசிபி ஆபரேட்டர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் தமிழரசனை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு தமிழரசனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை டீன் தேவி மீனாள் கூறுகையிக், உயிரிழந்த தமிழரசனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு இருந்ததால் தான் அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்துள்ளர்.
இருப்பினும் கொனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த இளைஞனர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.