#BIG NEWS : மணிப்பூரில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..!!

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைள மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஒருவரின் தலை வெட்டப்பட்டு தனியாக மூங்கில் குச்சியில் தொங்கவிடப்பட்டது போன்று வீடியோ வெளியாகி இருக்கிறது. இவர் குகி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இவர் டேவிட் தீக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஜூலை 2ஆம் தேதி நடந்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் டேவிட் தீக்கை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதில் தலை பகுதியை மட்டும் மூங்கில் குச்சிகளால் ஆன வேலியில் தொங்கவிட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Grisly video surfaces in Manipur, showing decapitated head amid ethnic clashes. Calls for justice and peace. #ManipurViolence #EthnicClashes #ManipurBurning #ManipurVideo #ManipurViralVideo
— One Viral (@OneViralAsia) July 21, 2023
Read more here: https://t.co/WB6dENY7pE