1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : WWE வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார்!

Q

மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ(Rey Mysterio) சீனியர் காலமானார்.

ரே மிஸ்டீரியோவின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். ‘619’ என்கிற அடைமொழியுடன் WWE மல்யுத்த களத்தில் அவரின் சண்டை பிரபலமாக இருந்தது. 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும். களத்தில் நேர்மையுடன் அதேநேரம் தனது வித்தியாசமான சண்டை நகர்வுகள் எதிராளிகளை நிலைகுலையச் செய்யும்.

இவருக்கு தற்போது வயது 66 ஆகும். அதேநேரம், அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் எதும் விளக்கப்படவில்லை. உயரம் குறைவானவராக இருந்தாலும், மிகுந்த பராக்கிரமத்துடன் சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்யும் வல்லமை கொண்டவர். 

களத்தில் அவரது செயல்பாடுகள் எதிராளிகளையே மிரட்சியடைய செய்யும். குறிப்பாக, கயிறுகளுக்கு இடையில் சுழன்று சென்று, எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் அவரது ட்ரேட்மார்க் ஷாட், மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like