1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலியின் ஜான்னிக் சின்னர் சாம்பியன்..!

1

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர் (23), 'நம்பர்-2' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (22), மோதினர்.

இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் வென்றார். ஆனால் அடுத்தடுத்த செட்களில் சின்னரிடம் திணறிய அல்காரஸ், மீண்டு வர முடியாமல் திணறினார். 2வது செட்டை 6-4 என வென்ற சின்னர், 3 மற்றும் 4வது செட்களையும் 6-4 என வென்றார். முடிவில், 3 - 1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 

இந்த வெற்றியின் மூலம், பிரெஞ்ச் ஓபன் பைனலில் (2024) அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் சின்னர் பதிலடி கொடுத்தார். மேலும், விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் அல்காரஸ் கனவும் தகர்ந்தது.

ஆண்கள் இரட்டையர் பைனலில் பிரிட்டனின் ஜூலியன் காஸ், கிளாஸ்பூல் ஜோடி, 6-2, 7-6 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ரின்கி, நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை சாய்த்து கோப்பை வென்றது.
 

பெண்கள் இரட்டையர் பைனலில் தைவானின் சு வெய், லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ ஜோடி, ரஷ்யாவின் வெரோனிகா, பெல்ஜியத்தின் மெர்டென்ஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை ஆஸ்டபென்கோ ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டை வெரோனிகா ஜோடி 6-2 என வசப்படுத்தி பதிலடி தந்தது.
 

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டில் வெரோனிகா ஜோடி 6-4 என அசத்தியது. முடிவில் வெரோனிகா ஜோடி 3-6, 6-2, 6-4 என வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.

Trending News

Latest News

You May Like