1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை - மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து..!

1

உலகம் முழுவதும் மாறி வரும் பழக்க வழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதுமே 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

ஆய்வறிக்கையின்படி, உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட 100 கோடிக்கும் அதிகமான மக்களில், 88 கோடி பேர் பெரியவர்கள், 15 கோடியே 90 லட்சம் பேர் குழந்தைகள் ஆவர். உடல் பருமன் காரணமாக இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றினால், உடல் எடையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பலரும் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்கிறார்கள். அதில் ஆபத்து ஏற்பட்டு மரணம் கூட ஏற்படுகிறது. 

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் மகன் ஹேமசந்திரன் தனது உடல் பருமனை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விரும்பி சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தாராம். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவத்தனர். 

இதனிடையே, புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை தமிழக மருத்துவத்துறை அமைத்தது. அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டது.

ஹேமச்சந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. ஒரு மணிநேரமாக ஹேமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர். மேலும், தகுதியான மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்க தாமதமானது தான் இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டது


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது.  மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் வணிக நோக்கில் செயல்படும் போது குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகள் தேவை என்றும் சுவாமிநாதன் தெரிவித்தார். 

பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த தமிழ்நாடு அரசின்| உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Trending News

Latest News

You May Like