1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : கொலை செய்யப்பட்டாரா ஜெயக்குமார்... வெளியான அதிர்ச்சி போட்டோ..!

1

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும். இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஜெயக்குமாரின் கழுத்து, கை, கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலையை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா? என சந்தேகம்எழுந்துள்ளது. வேறு ஒரு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like