#BIG NEWS : விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்..!
நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளாராம்
சென்னை வடபழனியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் விஷால், “2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை, அதனால்தான் அரசியலுக்கு வருகிறேன்.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சி தொடங்கப்படும். ஏப்ரல் 19 ஆம் ஆண்டு 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன்.