1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : வினோத் காம்ப்ளி உடல்நிலை கவலைக்கிடம்..!

Q

வினோத் காம்ளியின் பெயரை சொன்னாலே அவர் கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பதும் சிறு வயது முதலே இருவரும் கிரிக்கெட் துறையில் சிற்நது விளங்கியவர்கள், நிறைய சாதனைகளை செய்தவர்கள் என்பது தான் நினைவுக்கு வரும்.

 

வினோத் காம்ப்ளி தற்போது தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 52 வயது ஆகிறது. ஒருநாள் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர், தனது ஓய்வுக்கு பின்னர் பயிற்சி மையம் அமைத்தும் பல வீரர்களை உருவாக்கி இருக்கிறார்.

 

மராட்டிய கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.52 வயதாகும் வினோத் காம்ப்ளி சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வினோத் காம்ப்ளி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்த அவர், சனிக்கிழமை இரவு உடல்நிலை மீண்டும் மோசமானதால் தானே அக்ரிதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் நலம்பெற வேண்டுமென ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like