#BIG NEWS : விஜய்யுடன் கூட்டணி...? அரசியலில் முக்கிய திருப்பம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறினார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று வினாவிற்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார். அதே சமயம், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'தேர்தல் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது' என்றும், விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணியை முறிக்க அதிமுக தயாரா என்ற கேள்விக்கு, அனுமானத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது எனவும் இபிஎஸ் கூறியுள்ளார்.
பாஜக மற்றும் தவெகவை ஒப்பிட முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருப்பதாக தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற வினாவுக்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.