#BIG NEWS : பூஜா கேத்கரை ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்ததை ரத்து செய்ய UPSC முடிவு..?
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மகாராஷ்டிராவைச் பூஜா கேத்கர் புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு தனக்கு தனி அறை மற்றும் கேபின் கேட்டு அடம்பிடித்த பூஜா கேத்கர், தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தி சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமின்றி பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக, ஊனமுற்றோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்காக சான்றிதழை போலியாக சமர்ப்பித்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பூஜா கேத்கரின் பயிற்சி முடிவதற்குள், அவர் புனேவில் இருந்து வாஷிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பூஜா கேத்கர் மீதான இந்த புகார் தொடர்பாக விசாரிக்க ஒன்றிய அரசு தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக ஜூலை 23ம் தேதிக்குள் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொய் சொல்லியும், தனது அடையாளத்தை மறைத்து தேர்வு எழுதியதற்காக பூஜா கேத்கருக்கு விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரம்பு மீறி மோசடி செய்ய முயற்சித்த பூஜா கேத்கருக்கு எதிராக யுபிஎஸ்சி நடவடிக்கைகளை துவங்கி உள்ளது.
“இந்த விசாரணையில், அவர் தனது பெயர், தந்தை மற்றும் தாயின் பெயர், அவரது புகைப்படம் / கையொப்பம், அவரது மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் ஆகியவற்றின் மூலம் தனது அடையாளத்தை போலியாக மாற்றி தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மற்றும் முகவரி.”
“எனவே, யுபிஎஸ்சி, காவல்துறை அதிகாரிகளிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்வதன் மூலம் குற்றவியல் வழக்கு உட்பட அவருக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது மற்றும் அவரது சிவில் சர்வீசஸ் வேட்புமனுவை ரத்து செய்ய ஒரு ஷோ காஸ் நோட்டீஸை (எஸ்சிஎன்) வெளியிட்டுள்ளது. தேர்வு-2022/ சிவில் சர்வீசஸ் தேர்வு-2022 விதிகளின்படி, எதிர்காலத் தேர்வுகள்/தேர்வுகளில் இருந்து விலக்கு” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அவர் அளிக்கும் பதிலை வைத்து, எதிர்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.