#BIG NEWS : ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்?

நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இத்திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசின் செலவை குறைக்குமென அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக, தனது கருத்தை டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் பதிவு செய்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்... செப்.18ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது