#BIG NEWS : நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு..!

கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நாடு முழுக்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்போது கடைசி நேரத்தில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.. மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவுறுத்தலின் பெயரிலேயே புதிய கட்டணம் அமல்படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், (ஜூன் 3) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.. நாடு முழுக்க ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. நாடு முழுக்க அந்த சுங்கக் கட்டண உயர்வே நாளை நள்ளிரவு அமலுக்கு வருகிறது.