1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நாளை முதல் TNSTC பேருந்துகள் கோயம்பேடு செல்லாது..!

1

88.52 ஏக்கர் பரப்பளவில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்.

இந்த பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதிகள் உள்ளன. தினமும் 2310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மருத்துவமனை, கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஏடிஎம் அறை, நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறை, சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது என பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 14 நடை மேடைகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகளும் உள்ளன.

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நாளை (ஜன.30) முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் |இருந்து 160 பேருந்துகளும் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

 

 

Trending News

Latest News

You May Like