#BIG NEWS : இதனால் தான் நடிகர் கலாபவன் மணி இறந்தார்..! திடுக்கிடும் திருப்பம்!

பல குரல் மன்னனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய கலாபவன் மணி கேரள சினிமாவை ஆண்டு கொண்டிருந்த மம்முட்டி, மோகன்லாலை எதிர்த்து நிற்கும் வில்லனாக உருவெடுத்தார்.
அதுமட்டுமல்லாது கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என எந்த கதாபாத்திரம் எடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை பொறுத்திக் கொள்ளும் ஆகச் சிறந்த கலைஞன் இவர். சினிமாவில் இவரின் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது.
கடைசியாக இவர் நடித்த படம் தமிழில் வெளியான பாபநாசம் திரைப்படம். பன்முகக் கலைஞராக வலம் வந்த இவரின் இறப்பு மர்மமாக அமைந்தது.நடிகர் கலாபவன் மணி கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பமாக தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே மரணத்துக்கு காரணம் என கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மரணத்தை கலாபவன் மணியே தேடிக்கொண்டதாகவும் விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
#BREAKING | நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!#SunNews | #KalabhavanMani pic.twitter.com/bn6uw8VAY5
— Sun News (@sunnewstamil) November 13, 2023