#BIG NEWS : இது தான் விஜய் கட்சியின் பெயர்..!
சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது . முதலில் கட்சியை பதிவு செய்து விட்டு அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பதை முடிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பணிகளை செய்யும் போது தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் விஜய் தொடங்கும் கட்சியின் பெயருக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் தலைவராக விஜய் செயல்பட இருக்கிறார். இதற்கான நீண்ட அறிக்கையை விஜய் தனது X பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சுருக்கமாக இதற்கு TVK (த.வெ.க) என்று பெயரிடப்பட்டுள்ளது.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024