1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : இனி பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் செல்ல இது கட்டாயம்..!

1

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் வணங்கப்படுவது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆகும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கம். 

பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது.இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பழனி கோவிலில் இந்து அல்லாதவர்களை கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

அதாவது, பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும், மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்திரவாதம் “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like