#BIG NEWS : தமிழ்நாட்டை மீண்டும் வஞ்சித்துள்ளது ஒன்றிய அரசு..!

பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டை மீண்டும் ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு ரூ. 1,554.99 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பெயர் இதில் இடம்பெறவில்லை.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி கோரியிருந்தது.