#BIG NEWS : காலையில் அரங்கேறிய சோகம்..! சென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி இருவர் பலி..!
சென்னை ஆவடி சாலையில் குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி தாறுமாறாக ஓடி, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. மேலும், கார், இருசக்கர வாகனங்களை இடித்துவிட்டு, இறுதியில் மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. லாரி ஓட்டுநரை பிடித்த அப்பகுதி மக்கள் அவரை கம்பத்தில் கட்டி வைத்தனர். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.