#BIG NEWS : ரிஷப் பந்தின் உயிரை காப்பாற்றியவர் தற்போது உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்..!
2018 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டவர் ரிஷப் பண்ட். தற்போது இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டி தொடர்களிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லி டெகரா டென்னில் ரிஷப் பந்துக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் இவரது கார் ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சுமார் 200 மீட்டர் இழுத்துச் சென்று நெருப்புக்கு இறையானது. பென்ஸ் வகை கார் என்பதால் தற்காப்பு கவசங்கள் இருந்ததால் இவர் உயிர்த்தப்பினார்.
இருந்தாலும் இவருக்கு முட்டி உடைந்து பின்னந்தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அப்பொழுது அங்கே வந்த இருவர் கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் பண்தை பத்திரமாக வெளியே இழுத்து காப்பாற்றினார்கள். அருகில் உள்ள சாசம் மருத்துவமனையிலும் அவரை அனுமதித்தனர். சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்திலிருந்து ரிஷப் பண்தை காப்பாற்றியது ரஜித்குமார் மற்றும் நீசி குமார் என்பவர்கள் தான் என்பதை சுயநினைவு வந்தவுடன் அறிந்து கொண்டார் ரிஷப் பண்ட். அவர்கள் இருவரும் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். இப்பொழுது தன் உயிரை காப்பாற்றிய அவர்கள் இருவருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார்.
இந்நிலையில் ரிஷப் உயிரைக் காப்பாற்றிய புர்காஜி பகுதியில் வசித்து வரும் 25 வயது ரஜித் தற்போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரஜத், மனு என்ற 21 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் இருவரும் தொலைபேசியில் மட்டுமே பேசிவந்துள்ளனர். இதனிடையே அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவர்கள் குடும்பத்தினர் முயற்சித்துள்ளனர். இதேபோன்று ரஜத் குடும்பத்தினருடம் வேறு பெண்ணுடன் திருமணத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதலர்கள், வயலில் தனியாகச் சந்தித்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அப்பெண் உயிரிழந்துள்ளார்.
தற்போது ரஜத் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். இதனிடையே, தனது பெண்ணை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக ரஜத் மீது பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஜத் சுய நினைவுக்குத் திரும்பிய பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.