#BIG NEWS :தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் ஆனந்த் கைது..!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். அதோடு, சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலானது.
மேலும், விஜய் எழுதிய கடிதம் நகலெடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெண்களிடம் கொடுப்பட வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்படிருந்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் விஜய்யின் கடிதத்தை துண்டு பிரசுரமாக விநியோகித்து வருகின்றனர்.
சென்னையிலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வகுப்பு முடித்து வெளியே வந்த மாணவிகளிடம் கொடுத்தனர். பூக்கடையில் போலீசார் தரக்கூடாது என மறுத்த நிலையில், போலீசாருடம் த.வெ.க மகளிர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே, பூக்கடையில் துண்டுபிரசுரம் விநியோகம் செய்ததாக தவெக தொண்டர்களை கைது செய்த போலீசார் அவர்களை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர்.
கைது செய்யப்பட்ட தொண்டர்களை காண பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அங்கு சென்றார். அப்பொழுது போலீசார் அவரையும் கைது செய்தனர். பின்னர், பொதுச் செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.