1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தமிழிசை..!

1

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக எம்பி கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தமிழிசை தோல்வியை தழுவினார். இதனைத்தொடர்ந்து பாஜக அரசு அமைந்தவுடன் 2019-ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமிக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்களைவை தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.அவர் புதுச்சேரியில் அல்லது வடசென்னை போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

புதுச்சேரியில் வேட்பாளராக தமிழிசை இருக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என பாஜக தலைமை நம்புவதாக தெரிகிறது. அதேபோல் தமிழ்நாட்டில், கன்னியாகுமரியை பொருத்தவரை தமிழிசை சௌந்தரராஜனின் பூர்வீக தொகுதியாக இருப்பதால் தமிழகத்தில் பாஜக பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரி தொகுதி உள்ளது. இதனால் ஏற்கனவே மத்திய இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனும் கூறப்படும் நிலையில் வயது காரணமாக தமிழிசை சௌந்தரராஜன் பெயரும் கன்னியாகுமரி தொகுதியில் அடிபடுகிறது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். 

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான்; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். புதுச்சேரியில் போட்டியிட மாட்டேன். எந்த தொகுதி என்று பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் எனவும் கூறினார்.  

 

Trending News

Latest News

You May Like