1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தமிழக எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை..!

Q

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர்அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ் சியம் ஆகியோர் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசா ரணை சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்துவந்தது.
சிபிஐ குற்றச்சாட்டில், ‘‘கடந்த 1997 டிசம்பர் 15 முதல் 2000 ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508-ஐ ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சட்டவிரோதமாகப் பெற்றுள்ளனர். இதற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் எந்தவொரு முன்அனுமதியும் பெறவில்லை. எனவே, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் மீதும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் ‌நீ‌‌திம‌ன்றம், ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓரா‌ண்டு ‌சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோ ருக்கு தலா 2 ஆண்டுகள் ‌சிறை‌ தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தது.

Trending News

Latest News

You May Like