1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தமிழகமே அதிர்ச்சி..! காஞ்சிபுரம் அருகே குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு..!

1

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த சம்பவம் நடத்திய குற்றவாளிகளை யார் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தற்போது அதே போல் காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்துள்ளனர் கயவர்கள்.

காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் சுமார் 96 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள 500 லிட்டர் கொள்ளளவு, ஆறடி அகலம் உள்ள குடிநீர் தொட்டியில் நேற்று யாரோ சில மர்ம நபர்கள் மலத்தை கலந்து விட்டனர் என்ற தகவல் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பரவியது.

மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளார். நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததா அல்லது வேறு ஏதாவது கலந்துள்ளதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற உத்தரவிட்டனர். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவும் வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திருவந்தார் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Trending News

Latest News

You May Like