1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர்கள்!

1

 எஸ்.பி. வேலுமணியின் மகனின் திருமணம் இன்று கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர். குறிப்பாக பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உள்ளது கவனம் பெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவரிடமும் சகஜமாக பேசி கைகுலுக்கி தனது மரியாதையை செலுத்தினார்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், , தமிழக எதிர்க்கட்சி சட்டமன்றக் கொறடாவும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான, எஸ்.பி.வேலுமணி  மகன்  V.விஜய் விகாஸ், மணமகள் செல்வி C.T. தீக்ஷனா ஆகியோரின் திருமண விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் உள்ளிட்டோருடன்  கலந்து கொண்டது  மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று, இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.


இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், மணமக்கள் இருவரும், வாழ்வின் சகல வளமும், ஆரோக்கியமும் பெற்று, மனமகிழ்வோடு வாழ்ந்திட  அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like