1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நாளை வரை கெடு விதித்த உச்சநீதிமன்றம்..!

Q

நாட்டின் மிகப் பெரிய வங்கியை மோடி அரசு பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ள தேர்தல் பத்திங்கள் குறித்த விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை வெளியிட ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் கோரி எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றதில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது. 
இந்நிலையில் அவகாசம் கேட்ட எஸ்பிஐ கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது. நாளை மாலைக்குள் தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார் என்ற விவரங்களை வெளியிடுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களை மார்ச் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் எஸ்பிஐ-யிடம் சிறிது நேர்மையை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
தேர்தல் பத்திரங்களின் விவரங்களை அளிப்பதில் எஸ்பிஐ-க்கு என்ன பிரச்சனை? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க எஸ்பிஐ ஜூன் வரை அவகாசம் கோரியது. இதில், 24க்கும் குறைவான அரசியல் கட்சிகள் தான் தேர்தல் பத்திரங்களின் மூலமாக நன்கொடை பெற்றுள்ளதாகவும், அதன் தகவல்களை சேகரிக்காமல் 26 நாட்களாக எஸ்பிஐ என்ன செய்து கொண்டிருந்தது என நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

Trending News

Latest News

You May Like